இலங்கை செய்தி

சிறுவர்களுக்காக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கோரும் எதிர்கட்சி – தனிநபர் சட்டமூலத்தை சமர்ப்பிக்க தீர்மானம்

சமூக ஊடக தளங்களில் சிறுவர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை கோரி இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷனா ராஜகருணா தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம் சிறுவர்களை பாதுகாப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த திருத்தங்களில், பயனர்களின் வயது சரிபார்ப்பு, பெற்றோரின் அனுமதி, சிறுவர்களது நிகழ்நிலை பாதுகாப்பு அபாயங்களை மதிப்பிடுதல் மற்றும் சமூக ஊடகங்களில் இடம்பெறும் துன்புறுத்தல் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தல் ஆகியவை அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல நாடுகள் ஏற்கனவே குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களை கொண்டுள்ளதாக கூறிய அவர் இலங்கையில் போதுமான பாதுகாப்பு இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.

அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, சிறுவர்களுக்கான பாதுகாப்பை ஒரு பொதுவான முன்னுரிமையாக கொண்டு, இந்த சட்டமூலத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சிறுவர்கள் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவதால் அவர்களது நீண்டகால வளர்ச்சி பாதிக்கலாம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எச்சரித்தார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!