ஈரானில் 08 மாடிக் கட்டடத்தில் வெடி விபத்து!
ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதியில் இன்று வெடி விபத்து பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எட்டுமாடிக் கட்டடம் ஒன்றில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதில் இரண்டு தளங்கள் முற்றிலும் சேதமடைந்ததாகவும் அரச தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்புக்கான காரணம் விசாரணையில் இருப்பதாக ஹார்மோஸ்கான் (Hormozgan)மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை இயக்குநர் ஜெனரல் மெஹ்ரதாத் ஹசன்சாதே (Mehrdad Hassanzadeh) கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
🚨🇮🇷 BREAKING: Multiple explosions were reported in a residential building in the Azadegan neighborhood of Bandar Abbas in southern Iran.
Initial reports indicating a gas leak as the cause. pic.twitter.com/B0MU3KWX41
— PLT Report (@pltreport) January 31, 2026





