நிறைவடைந்த காலக்கெடு : பரபரப்பான சூழ்நிலையில் புட்டினை சந்தித்த ஈரான் அதிகாரி!
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி ( Ali Larijani) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை (Vladimir Putin) நேற்று சந்தித்துள்ளார்.
இதன்போது மத்தியக் கிழக்கில் நீடித்து வரும் அமைதியின்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு அமெரிக்கா வழங்கிய காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
ஒப்பந்தத்தை எட்டாவிட்டால் ஈரான் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்ரகாம் லிங்கன் உள்ளிட்ட பல போர் கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளின் வழியில் இருப்பதாகவும் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் ஈரான் தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது, மேலும் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்கிறது என்ற அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் மறுத்துள்ளது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அமெரிக்காவின் அடுத்தக் கட்ட நவடடிக்கைகள் குறித்து சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





