நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய குழுவினரின் அட்டகாசம் – 25 தொழிலாளர்கள் படுகொலை!
வடகிழக்கு நைஜீரியாவில் ஆயுதமேந்திய போராளிக்குழுவினர் நடத்திய கொடிய தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.
போர்னோ (Borno) மாநிலத்தின் சபோன் காரி (Sabon Gari ) நகரில் பதுங்கியிருந்த துப்பாக்கிதாரிகள் 25 கட்டுமானத் தொழிலாளர்களைக் கொன்றதாக அவ் மாநிலத்தின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை பகிரங்கமாக உறுதிப்படுத்த நைஜீரியாவில் உள்ள அதிகாரிகள் பெரும்பாலும் மறுப்பதாக AP இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே இன்றைய தினம் ஆயுதம் ஏந்திய போராளிக்குழுவினர் இராணுவத் தளத்தை குறிவைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஒன்பது வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பணிக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





