03 மில்லியனுக்கும் அதிகமான எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட தயாராகும் அமெரிக்க நீதித்துறை!
ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளிலிருந்து மூன்று மில்லியனுக்கும் அதிகமான பக்கங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்று வெளியிடுவதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது.
2000 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் 180,000 படங்கள் சமீபத்திய தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் எப்ஸ்டீன் (Epstein) சிறையில் இருந்தபோது அவர் பற்றிய உளவியல் அறிக்கைகள் மற்றும் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew Mountbatten-Windsor) என்று கருதப்படும் தி இன்விசிபிள் மேனுக்கு ( Invisible Man) அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களும் அடங்கும்.
அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் ( Bill Clinton) உட்பட முன்னணி வணிக நிர்வாகிகள், பிரபலங்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடனான எப்ஸ்டீனின் உறவுகளை முந்தைய வெளியீடுகள் வெளிச்சம் போட்டு காட்டியிருந்த நிலையில், புதிய தகவல்கள் வெளியாகவுள்ளன.
ட்ரம்ப், எப்ஸ்டீன் பற்றிய ஏராளமான ஆவணங்களை வெளியிடுவதைத் தடுக்க பல மாதங்களாகப் போராடினார்.
இருப்பினும் அவரது குடியரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட ஒரு கிளர்ச்சி, அனைத்து ஆவணங்களையும் வெளியிடுவதை கட்டாயப்படுத்தும் சட்டத்தில் கையெழுத்திட அவரை கட்டாயப்படுத்தியது.
இதற்கமைய புதிய தகவல்கள் வெளிவரும் எனவும், இதில் ஏராளமான பிரபலங்களின் முகத்திரை விலகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.





