அமெரிக்காவில் மீளவும் தலைத்தூக்கிய நிதிப்பிரச்சினை – பணிப்புறக்கணிப்பில் மத்திய அரசு!
அமெரிக்காவில் நிதிபற்றாக்குறை பிரச்சினை மீளவும் தலைத்தூக்கியுள்ள நிலையில், பகுதியளவிலான பணிநிறுத்தத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
முன்னதாக அமெரிக்க கரூவூலத்துறை நிதி பிரச்சினை காரணமாக முடங்கியிருந்த நிலையில், செப்டம்பர் மாதம் நிதியளிக்க செனட் சபை ஒப்புக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து சேவைகள் வழமைக்கு திரும்பியிருந்தன. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் மீளவும் நிதிப்பிரச்சினை தலைத்தூக்கியுள்ளது.
மினியாபோலிஸில் இரண்டு அமெரிக்க குடிமக்கள் கூட்டாட்சி முகவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குடியேற்ற அமலாக்கத்திற்கு கூடுதல் நிதி வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே மீளவும் பணிநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





