காங்கோவில் கோல்டன் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து – 200 பேர் பலி!
கிழக்கு காங்கோ (Congo) ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபாயா (Rubaya) கோல்டன் சுரங்கத்தில் இந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் ஏறக்குறைய 200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக தங்க உற்பத்தில் சுமார் 15 சதவீதத்தை ருபாயா கோல்டன் சுரங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதேபோல் அகழ்வில் ஈடுபடும் பலர் சுரங்க விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இதற்கமைய கடந்த புதன்கிழமை சரிவு ஏற்பட்டது. இருப்பினும் நேற்றுவரை துள்ளியமான செய்திகள் வெளியாகவில்லை.
இந்த நிலச்சரிவில் சுரங்கத் தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் சந்தைப் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் காயமடைந்த நிலையில் 20 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுரங்கம் அமைந்துள்ள மாகாணத்தின் கிளர்ச்சியாளர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் லுமும்பா கம்பேரே முயிசா (Lumumba Kambere Muyisa) தெரிவித்துள்ளார்.





