இலங்கை செய்தி

சிரேஷ்ட தலைவர் மாவையின் உருவச்சிலை இன்று திறப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK சிரேஷ்ட தலைவர் அமரர் மாவை சேனாதிராஜாவின் Mavai Senathiraja நினைவுச்சிலை இன்று (31) திறக்கப்படுகின்றது.

யாழ். மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

மாவை சேனாதிராஜாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டே இந்தச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.

இதைத் தொடர்ந்து, யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் பிரதம அறங்காவலர் சா.செ.இளங்கோவன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

நினைவுப் பேருரைகளைத் தொடர்ந்து மாவை சோ.சேனாதிராஜாவின் முதலாமாண்டு நினைவுமலர், பேராசிரியர் பாஞ்.இராமலிங்கம் எழுதிய ‘ஈழ அண்ணல் சோ.மாவை சேனாதிராஜா’ ஆகிய இரு நூல்களும் வெளியிடப்படவுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!