வெனிசுலாவிற்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்கும் அமெரிக்க எயார்லைன்ஸ்!
வெனிசுலா மீதான இராணுவ தலையீடுகளை தொடர்ந்து மீளவும் விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க எயார்லைன்ஸ் (American Airlines) நேற்று அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவை தொடர்ந்து விமானங்களை இயக்குவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி ( Sean Duffy) , அமெரிக்க விமான நிறுவனங்கள் வெனிசுலாவிற்கு பறப்பதைத் தடைசெய்த 2019 ஆம் ஆண்டு உத்தரவை ரத்து செய்துள்ளார்.
விமான சேவையைத் தொடர்ந்து நிறுத்தி வைப்பது இனி பொது நலனுக்காக தேவையில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடனான (Delcy Rodríguez) கலந்துரையாடலுக்குப் பிறகு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க குடிமக்கள் மிக விரைவில் வெனிசுலாவுக்குச் செல்ல முடியும், மேலும் அவர்கள் அங்கு பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று ட்ரம்ப் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





