நைஜீரியாவின் நியாமி விமான நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு – 01 மணிநேரம் நீடித்த தாக்குதல்!
நைஜீரியாவின் நியாமியில் (Niamey) உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் நேற்று துப்பாக்கிச் சூடு மற்றும் பலத்த வெடிச்சத்தங்கள் ஏற்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதாகவும், உடனடியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் ஏற்றுமதிக்காக சுமார் 1,000 மெட்ரிக் டன் யுரேனியம் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த தாக்குதலால் யுரேனியம் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
நைஜீரிய அதிகாரிகள் சோமைர் சுரங்கத்தின் கட்டுப்பாட்டை பிரெஞ்சு அணுசக்தி குழுவிடமிருந்து கைப்பற்றிய பின்னர், கடந்த ஆண்டு இறுதியில் யுரேனியத்தை விமான நிலையத்திற்கு மாற்றியிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.





