வட்டி விகித குறைப்பு – அமெரிக்க பெடரல் வங்கியின் தீர்மானம்!
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அதன் வட்டி விகிதத்தை 3.50% – 3.75% இல் பராமரிக்க நேற்று முடிவு செய்துள்ளது.
ஆளுநர்கள் கிறிஸ்டோபர் வாலர் (Christopher Waller) மற்றும் ஸ்டீபன் மிரான் (Stephen Miran) ஆகியோர் கால் சதவீத புள்ளி விகிதக் குறைப்பை ஆதரித்துள்ளனர்.
அத்துடன் எதிர்காலத்தில் கடன் வாங்கும் செலவு குறைப்பு எப்போது நிகழலாம் என்பதற்கான எந்த அறிகுறியையும் பெடரல் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.
இதேவேளை டிசம்பரில் வேலையின்மை விகிதம் 4.4% ஆக இருந்த நிலையில், பணவீக்கம் அதிகரித்தே உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.





