உலகம்

கொலம்பியாவில் விமான விபத்து: 15 பேர் பலி!

கொலம்பியாவில் Colombia இடம்பெற்ற விமான விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர்.

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்திலுள்ள கிராம பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

அரசுக்கு சொந்தமான Satena என்ற விமான சேவை நிறுவனமே குறித்த விமான சேவையை வழங்கியுள்ளது.

விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்பதை கொலம்பியாவின் போக்குவரத்து அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

விமானம் பயணத்தை ஆரம்பித்து 12 நிமிடங்களில் தொடரை இழந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

விமான விபத்து இடம்பெற்ற கொலம்பியா – வெனிசுலா எல்லைப் பகுதியானது நாட்டு இராணுவத்துக்கு எதிராக சட்டவிரோத ஆயுத குழுக்கள் செயல்படும் பகுதியெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

13 பயணிகளும், இரு விமான அதிகாரிகளும் விமானத்தில் இருந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 36 வயதான நாடாளுமன்ற உறுப்பினர் Diógenes Quintero ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

 

 

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!