ஈரானில் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாகும் கைதிகள் : பலி எண்ணிக்கை 20000 கடந்திருக்கலாம்!
ஈரானில் அரசுக்கு எதிராக போராடி வரும் மக்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகுவதாக அங்கிருந்து வெளிவரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் தெஹ்ரான் (Tehran) போன்ற நகரங்களில் இந்த வழக்குகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த போராட்டக்காரர்களைக் கைது செய்ய பாதுகாப்புப் படையினர் மருத்துவமனைகளில் புகுந்து வருவதாகவும், முன்னாள் கைதிகள் கடுமையான அடிதடி மற்றும் போலி மரணதண்டனைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாட்டு போராளிகள், குறிப்பாக ஈராக்கிய துணை ராணுவக் குழுக்கள், ஈரானிய பாதுகாப்புப் படைகளுக்கு அடக்குமுறையில் உதவியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதற்கிடையே ஈரானிய தேசியப் புரட்சியின் காரணமாக 20,000 பேர் வரையில் இறந்திருக்கக்கூடும் என்று ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





