அமெரிக்காவில் ICE முகவர்களை குறைக்க ட்ரம்ப் உறுதி!
அமெரிக்காவின் – மினசோட்டாவில் கூட்டாட்சி குடியேற்றப் படைகளின் “விரிவாக்கத்தைக் குறைப்பதாக” ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.
குடியேற்ற முகவர்களால் இரண்டுபேர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் எதிர்பலைகள் உருவாகின.
இந்நிலையில், ட்ரம்ப் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கை தனது அரசியல் தளத்தினரிடையே ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வதற்கான பின்வாங்கல் அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயமுடன் (Kristi Noem) இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.





