ஐந்தாவது கொவிட் அலையை எதிர்கொள்ளும் அவுஸ்ரேலியா : மக்களுக்கு எச்சரிக்கை!
அவுஸ்திரேலியாவில் கொவிட்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்ற நிலையில் தடுப்பூசி குறித்து மக்கள் அலட்சியமாக இருக்ககூடாது என அந்நாட்டின் மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இதன்படி ஆறுமாதங்களில் 16. 5 மில்லியன் மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய மருத்துவசபை கரிசனைக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
அவுஸ்ரேலியா தற்போது ஐந்தாவது கொவிட் அலையை எதிர்கொள்கிறது. நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த மார்ச்சில் காணப்பட்டதை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது அலட்சியமாகயிருப்பதற்கான தருணம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், பூஸ்டர்களை செலுத்திக்கொள்ளவேண்டு;ம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.