நிபா வைரஸ் பரவல் – 1700 பேரை பரிசோதனைக்கு உட்படுத்திய தாய்லாந்து!
நிபா வைரஸ் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு 1,700 விமானப் பயணிகளைப் தாய்லாந்து அரசாங்கம் பரிசோனை செய்துள்ளது.
அதன்படி, இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து பயணம் மேற்கொண்ட 1,700 விமானப் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சோதனை முடிவுகளில் அனைவருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்தை போலவே இந்தோனேசியா, மியான்மர், வியட்நாம் மற்றும் சீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் சுகாதார பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளன.
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் இரண்டு பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சோதனை நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 196 பேர் கண்டறியப்பட்டு, பின்னர் அனைவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பதை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
நிபா வைரஸ் தொற்றானது 40 முதல் 75 சதவீதம் வரை இறப்பு விகிதம் கொண்ட ஒரு விலங்கு வழி வைரஸ் ஆகும். இதற்கு தடுப்பூசி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





