தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறை தண்டனை!
தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியான யூன் சுக் இயோலின் (Yoon Suk Yeol) மனைவிக்கு 20 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய யூனிஃபிகேஷன் சர்ச்சிலிருந்து (Unification Church) இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 12.85 மில்லியன் வோன் பணத்தை ரொக்கமாக திருப்பித் தருமாறும், அவரின் வைர நெக்லஸை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் கொரியாவின் வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி தம்பதியினர் ஒரே நேரத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கிம் ஏப்ரல் மற்றும் ஜூலை 2022 க்கு இடையில் யூனிஃபிகேஷன் சர்ச்சிலிருந்து 80 மில்லியன் ($56,000; £40,600) பரிசுப் பொருட்களைப் பெற்றதாகக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





