அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் ஆசிய விஜயம் : பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்த வடகொரியா!
வடகொரியா நேற்று இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென் கொரிய மற்றும் ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு ஏவுகணைகளும் கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர்கள் அல்லது சுமார் 217 மைல்கள் பயணித்து ஜப்பான் கடலில் விழுந்ததாக ஜப்பானிய மற்றும் கொரிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்காவின் கொள்கைக்கான பாதுகாப்பு செயலாளர் எல்பிரிட்ஜ் கோல்பி (Elbridge Colby) ஜப்பானுக்கு பயணித்த சில மணிநேரங்களில் குறித்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி மற்றும் கடந்த செப்டம்பரில் தென் கொரியா ட்ரோன்கள் மூலம் தனது வான்வெளியில் ஊடுருவியதாக வட கொரியா குற்றம் சாட்டியிருந்தது.
இதற்கிடையில் இந்த ஏவுகணை ஏவுதல்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுவதாகும், என்று ஜப்பான் குறிப்பிட்டிருந்தது. இது குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக ஜப்பான் அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.





