பழி தீர்க்குமா இலங்கை? 30 ஆம் திகதி பலப்பரீட்சை!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி நாளை மறுதினம் (30) நடைபெறவுள்ளது.
கண்டி பல்லேகல Pallekele மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடிவருகின்றது.
முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
இதன்மூலம் 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இந்நிலையிலேயே T20 தொடர் ஆரம்பமாகின்றது.
ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என இலங்கை அணி இரசிகர்கள் கருதுகின்றனர்.





