பெப்ரவரி 08 ஆம் திகதி இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸ்திரேலியா பயணம்!
இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் Isaac Herzog அடுத்த மாதம் எதிர்வரும் 08 ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
ஆஸ்திரேலிய ஜனாதிபதி அந்தோனி அல்பானீஸி Anthony Albanese விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் கன்பரா செல்கின்றார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி சிட்னி, போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் பலியாகினர்.
யூத சமூகத்தை இலக்குவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இத்தாக்குதல் சம்பவமானது இஸ்ரேல் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான உறவிலும் விரிசலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இரு தரப்பு உறவை கட்டியெழுப்பும் நோக்கில் இஸ்ரேல் ஜனாதிபதிக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பை ஏற்று ஆஸ்திரேலியா வரும் இஸ்ரேல் ஜனாதிபதி, போண்டி பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
பெப்ரவரி 12 ஆம் திகதிவரை அவர் ஆஸ்திரேலியாவில் தங்கி இருப்பார். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவாரா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.





