அஜர்பைஜானில் தூதரக தாக்குதலுக்கு திட்டமிட்ட மூன்று இளைஞர்கள் கைது
அஜர்பைஜான்(Azerbaijani) தலைநகர் பாகுவில்(Baku) உள்ள ஒரு தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூன்று பேரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கொராசன்(Khorasan) மாகாணத்தில் உள்ள ISI(ISIS) துணை அமைப்பின் உறுப்பினர்களுடன் சதி செய்ததாக அரசு பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 2000ம் ஆண்டில் பிறந்தவர் என்றும் மற்ற இருவரும் 2005ல் பிறந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மத விரோதத்தின் அடிப்படையில் பயங்கரவாதத்திற்கு திட்டமிடல் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சதித்திட்டத்தின் மையமாக இருந்த தூதரகத்தின் பெயரை அதிகாரிகள் குறிப்பிடவில்லை, ஆனால் சேனல் 12(Channel 12) நிறுவனம், இஸ்ரேலிய தூதரகம் மீது இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.





