அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – 28 வயது இளைஞர் மரணம்
அம்பலாங்கொடை(Ambalangoda) சுனாமிவத்தை(Tsunamiwatta) பகுதியில் நடைபெற்ற தனியார் விருந்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விருந்தில் கலந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுடப்பட்டதில் பாதிக்கப்பட்டவர் காயமடைந்தார்.
பின்னர் அவர் பலபிட்டிய(Balapitiya) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், ,துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தாக்குதலில் பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தொடர்புடைய செய்தி





