அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். சற்று முன்னர் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கலகொட, சுனாமிவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதுடன், நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது