குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடை தொடர்பான சட்டமூலம் பிரான்ஸில் நிறைவேற்றம்!
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யும் சட்டமூலத்தை பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அங்கீகரித்துள்ளனர்.
130-21 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டமூலம் வரும் செப்டம்பர் முதல் அமலுக்கு வர உள்ளது.
சட்டத்திற்கு அமைய உயர்நிலைப் பாடசாலைகளிலும் தொலைபேசி பாவனை தடை செய்யப்படும்.
மேலும் அல்காரிதம்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க அறிவியல் பரிந்துரைகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இதை வலுவாக ஆதரித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
பிரான்ஸில் குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை விரைப்படுத்துமாறு உத்தரவு!





