ஈரான் அரச எதிர்ப்பு போராட்டம் – 6000இற்கும் மேற்பட்டோர் மரணம்!
ஈரானில் நடந்து வரும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,000ஐ தாண்டியுள்ளது.
அமெரிக்காவை மையமாகக் கொண்ட மனித உரிமை அமைப்புகளை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய போராட்டங்களில் 6,126 பேர் இறந்துள்ளதாகவும், 11,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
30 நாட்களுக்கும் மேலாக நீடித்த போராட்டங்கள் தொடர்பாக ஈரானிய பாதுகாப்புப் படையினரால் 41,800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.





