ஸ்காட்லாந்து – பிரான்ஸ் இடையே நேரடி கப்பல் சேவை ஆரம்பம்
ஸ்காட்லாந்தின் ரோசைத் (Rosyth) மற்றும் பிரான்சின் டன்கிர்க் (Dunkirk) துறைமுகங்களுக்கு இடையே நேரடி சரக்கு மற்றும் பயணிகள் படகு போக்குவரத்து சேவை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படவுள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பாவிற்கு நேரடிப் போக்குவரத்துத் தொடங்குவது சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
டேனிஷ் நிறுவனமான DFDS (டேனிஷ் சர்வதேச கப்பல் மற்றும் தளவாட நிறுவனம்) இயக்கவுள்ள இந்த 20 மணிநேரப் பயணச் சேவையானது, ஸ்காட்லாந்து பொருளாதாரத்திற்கு சுமார் 11.5 மில்லியன் பவுண்டுகள் வருமானத்தை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 40 பில்லியன் யூரோ மதிப்பிலான டன்கிர்க் துறைமுக மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமையவுள்ளது.
தற்போது பசுமைத் தொழில் மையமாக மாற்றப்பட்டு வரும் டன்கிர்க் துறைமுகத்திற்கான இச்சேவைக்காக, ரோசைத் துறைமுகத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு வசதிகள் துரிதமாகத் தயார் செய்யப்பட்டு வருகின்றன.





