17 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வெப்பநிலையை அனுபவிக்கும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
குறிப்பாக மெல்பேர்ன் நகரில் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான வானிலை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் பதிவான வெப்ப அலை காட்டுத்தீ அபாயத்தை அதிகரித்துள்ளது.
இதனால் கிராமப்புறங்களில் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவின் தலைநகரான மெல்பேர்னின் சில பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை (113 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியுள்ளது.
விக்டோரியாவின் வடமேற்கு மல்லி பகுதியில் உள்ள நகரங்களும் அதிகபட்சமாக 48.9 டிகிரி செல்சியஸ் (120 எஃப்) ஐ எட்டியுள்ளது.
இது மாநில சாதனையை முறியடித்ததாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையத்தின் முதற்கட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.





