அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல் – 30 பேர் உயிரிழப்பு!
அமெரிக்கா முழுவதும் தாக்கிய பனிப்புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நியூயார்க் (New York) , டெக்சாஸ் (Texas), பென்சில்வேனியா(Pennsylvania) மற்றும் மைனே (Maine) உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அத்துடன் உறைப்பனி நிலையில் சுமார் 80,0000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் (Texas), லூசியானா (Louisiana), மிசிசிப்பி (Mississippi) மற்றும் டென்னசி (Tennessee) ஆகியவை மின் தடைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அடங்கும்.
சில பகுதிகளில் மின் இணைப்பை மீட்டெடுக்க சில வாரங்கள் ஆகலாம் என நிறுவனங்கள் கூறுகின்றன.
தெற்கு ரோக்கி மலைகள் முதல் நியூ இங்கிலாந்து வரை உறைப்பனி பெய்து வருகிறது. இதன்காரணமாக சுமார் 180 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 21இற்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு அவசரகால அறிவிப்பை பிறப்பிக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.





