பயனர்களின் தனிப்பட்ட பேச்சை ஒட்டுக்கேட்ட கூகுள்? – சிக்கிய வழக்கை முடிக்க $68 மில்லியன் இழப்பீடு.
கூகுள் நிறுவனம் தனது பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களை ரகசியமாகக் கேட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, 68 மில்லியன் டாலர் (சுமார் ₹570 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு (Android) மொபைல்களில் இருக்கும் ‘கூகுள் அசிஸ்டெண்ட்’ (Google Assistant), பயனர்கள் அழைக்காத போதும் தானாகவே செயல்படத் தொடங்கி, அவர்களின் ரகசிய உரையாடல்களைப் பதிவு செய்ததாகப் பயனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
“ஹே கூகுள்” (Hey Google) என்று சொல்லாமலேயே, தவறான தூண்டுதலால் (Inadvertent trigger) இந்த மென்பொருள் உரையாடல்களைப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆடியோக்கள், பயனர்களுக்குத் தேவையான விளம்பரங்களைக் காண்பிப்பதற்காக (Targeted Advertising) விளம்பர நிறுவனங்களுடன் பகிரப்பட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனால் கூகுள் நிறுவனம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளது. இருப்பினும், நீண்ட காலம் நீதிமன்றத்தில் போராட வேண்டும் என்பதால் அதைத்தைத் தவிர்க்க இந்தத் தொகையைச் செலுத்தி வழக்கை முடிக்க அது முன்வந்துள்ளது.
பொதுவாக, கூகுள் அசிஸ்டெண்ட் ‘ஸ்டாண்ட்பை’ (Standby) பயன்முறையில் இருக்கும். “ஹே கூகுள்” (Hey Google) என்ற வார்த்தையைக் கேட்டவுடன் மட்டுமே அது செயல்படத் தொடங்கும். அதன் பிறகுதான் ஓடியோ கூகுள் சேமிப்பகத்திற்கு (Servers) அனுப்பப்படும். ஆனால், சில நேரங்களில் மொபைல் தவறாகப் புரிந்துகொண்டு, தனிப்பட்ட பேச்சுகளைப் பதிவு செய்துவிடுவதாக இந்த வழக்கு தொடரப்பட்டது.
கூகுள் இழப்பீடு யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும்?
இந்த வழக்கின் தீர்மான முன்மொழிவு கடந்த வெள்ளிக்கிழமை கலிபோர்னியா ஃபெடரல் நீதிமன்றத்தில் (California federal court) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அமெரிக்க மாவட்ட நீதிபதி பெத் லப்சன் ஃப்ரீமேன் (District Judge Beth Labson Freeman) ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மேலும் இது ஒரு தனிநபரால் தொடரப்பட்ட வழக்கு அல்ல, மாறாகப் பாதிக்கப்பட்ட பலருக்காகத் தொடரப்பட்ட ‘கிளாஸ் ஆக்சன்’ வழக்கு (class action லவ்சுபீட்) எனவே, நீதிமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்தால், இந்த இழப்பீட்டுத் தொகை பல பயனர்களுக்குப் பிரித்து வழங்கப்படும்.
யாரெல்லாம் மே 2016 முதல் கூகுள் சாதனங்களை (Google Devices) வைத்திருக்கிறார்களோ அவர்கள் இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்களாக இருக்கலாம்.
இந்த வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள், இழப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பகுதியை (சுமார் $22 மில்லியன்) தங்களின் கட்டணமாகக் கோர வாய்ப்புள்ளது.
ஆப்பிள் (Apple) நிறுவனமும் இதே போன்ற வழக்கில் சிக்கியாது,
கூகுளைப் போலவே, கடந்த ஜனவரி மாதம் ஆப்பிள் நிறுவனமும் ஒரு வழக்கை முடிக்க $95 மில்லியன் வழங்க ஒப்புக்கொண்டது.
ஆப்பிளின் ‘சிரி’ (Siri) மென்பொருள், பயனர்களின் அனுமதியின்றி ரகசியமாகக் கேட்டதாக அந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டது.
கூகுளைப் போலவே ஆப்பிள் நிறுவனமும் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், பயனர்களின் உரையாடல்களை மூன்றாம் தரப்பினருக்குப் பகிரவில்லை என்றும் மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.




