ரஷ்ய எரிவாயு தடைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புதல்!
ரஷ்ய எரிவாயு தடைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இறுதியாக ஒப்புதல் அளித்துள்ளன.
இதன்படி 2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரஷ்ய எரிவாயு இறக்குமதியைத் தடை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் தற்போது சட்டமாக நிறைவேற்றப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரஸ்ஸல்ஸில் இன்று நடந்த ஒரு கூட்டத்தில் இந்தக் கொள்கை அங்கீகரிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை ரஷ்ய எரிபொருளை பெரிதும் நம்பியுள்ள ஹங்கேரி (Hungary) இந்த விவகாரத்தை ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதாக அறிவித்துள்ளது.
ஹங்கேரி (Hungary) ரஷ்யாவின் எரிவாயுவை 90 சதவீதம் நம்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





