நிபா வைரஸ் தொற்று : ஆசிய நாடுகளில் பயண பரிசோதனை தீவிரம்!
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து, நேபாளம் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் சுகாதார கண்காணிப்பு மற்றும் பயண பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன.
மேற்கு வங்காளத்தில் இருந்து வரும் பயணிகளை தாய்லாந்து அதிகாரிகள் முக்கிய விமான நிலையங்களில் பரிசோதித்தப்பின் நாட்டிற்குள் அனுமதிப்பதாக கூறப்படுகிறது.
நேபாளம் அதன் சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவுடனான நில எல்லைகளில் சுகாதார மையங்களை அமைத்துள்ளது.
தைவான் நிபா வைரஸை 5 ஆம் வகை அறிவிக்கத்தக்க நோயாக வகைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தொற்று குறித்த அறிக்கையிடல் மற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கட்டாயப்படுத்த முடியும்.
நிபா வைரஸ் என்பது முதன்மையாக பாதிக்கப்பட்ட பன்றிகள் மற்றும் வௌவால்களிடமிருந்து பரவும் ஒரு ஜூனோடிக் (zoonotic) நோயாகும். நபருக்கு நபர் தொடர்பு மூலமாகவும் பரவக்கூடும் என்பதுடன் இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவீதம் வரை இருக்கும்.





