கடும் பனிப்பொழிவு – நியூயார்க் (New York) நகரில் 05 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் (New York) நகரில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான குளிர்கால புயல் அமெரிக்கா முழுவதும், பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 880,000 க்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளன.
அத்துடன் டென்னசி, டெக்சாஸ், லூசியானா மற்றும் மிசிசிப்பி ஆகிய இடங்களில் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவின் முக்கிய விமான நிலையங்களில் 11,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 12,000 விமானங்கள் தாமதடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





