ஆஸ்திரேலியாவை உலுக்கும் வெப்ப அலை – மில்லியன் கணக்கான மக்களுக்கு எச்சரிக்கை!
ஆஸ்திரேலியாவில் இன்று தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் இம்முறை சில பகுதிகளில் இந்த தினத்தை ஒட்டி நடத்தப்படும் கொண்டாட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அடிலெய்டில், கடுமையான வெப்ப முன்னறிவிப்பு காரணமாக ஆஸ்திரேலிய தின அணிவகுப்பு மற்றும் ஒளி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மில்லியன் கணக்கான மக்களுக்கு வெப்பநிலை குறித்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளைய தினம் வெப்பநிலை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தெற்கு மாநிலங்களான விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகபட்சமாக 40 பாகை செல்சியஸை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீ விபத்து குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தெற்கு ஆஸ்திரேலியாவில் நேற்றைய தினம் 48.5C வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





