அமெரிக்காவில் தீவிபத்தில் சிக்கிய தனியார் ஜெட் விமானம் : 08 பேரின் நிலை குறித்து கவலை!
அமெரிக்காவின் மைனே (Maine) விமான நிலையத்திலிருந்து எட்டு பேருடன் புறப்பட்ட தனியார் ஜெட் விமானம் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று இடம்பெற்றதாக அமெரிக்க விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், பாங்கூர் சர்வதேச விமான நிலையத்தில் இரட்டை எஞ்சின் டர்போ-ஃபேன் ஜெட் பாம்பார்டியர் சேலஞ்சர் 600 ( twin-engine turbo-fan jet Bombardier Challenger 600) என்ற ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தை அறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் விபத்தில் சிக்கியவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.





