டி20 தொடர் – இந்திய அணிக்கு 154 ஓட்டங்கள் இலக்கு
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், இன்று இரண்டாவது டி20 போட்டி குவகாத்தி(Guwahati) நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் குவித்தது.
நியூசிலாந்து அணி சார்பில்,கிளென் பிலிப்ஸ்(Glenn Phillips) 48 ஓட்டங்களும் மார்க் சாப்மன்(Mark Chapman) 32 ஓட்டங்களும் பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில், ஜஸ்ப்ரிட் பும்ரா(Jasprit Bumrah) 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகளையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.





