இந்தியா செய்தி

2026 பத்மஸ்ரீ அறிவிப்பு:பல விருதுகளை தட்டி தூக்கிய தமிழ்நாடு – மம்மூட்டிக்கு பத்ம பூஷன்

இந்தியாவின் குடிமை விருதுகளிலேயே நான்காவது உச்ச விருதான பத்ம ஸ்ரீ விருதுகள் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளில் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 05 பேர் இடம்பிடித்துள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியர் நீலகிரி ஆர். கிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று சிற்பக் கலைஞர் ராஜா ஸ்தபதி, திருவாரூர் மிருதங்க கலைஞர் பக்தவத்சலம் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், புதுச்சேரியை சேர்ந்த சிலம்பக் கலைஞர் கே.பழனிவேலுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பத்ம பூஷன் விருதுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி மறைந்த ஹிந்தி சூப்பர் ஸ்டார் தர்மேந்திராவுக்கும், கேரள முன்னாள் முதல்வர் மறைந்த அச்சுதனானந்தனுக்கும் பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, மலையாள நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருதும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை ஐஐடியின் தற்போதைய இயக்குநர் காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் கள்ளிப்பட்டி ராமசாமிக்கும், சமூக சேவைக்காக மயிலானந்தானுக்கு பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. கலைத்துறையில் காயத்ரி பாலசுப்பிரமணியன், ரஞ்சனி பாலசுப்பிரமணியனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையில் முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டேவுக்கும், வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஐபிஎஸ் விஜய குமாருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலக்கியம் மற்றும் கல்வி சேவைக்காக சிவசங்கரிக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. சென்னையைச் சேர்ந்த வயலின் கலைஞர் என்.ராஜம் என்பவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன், சென்னையைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதும், இஸ்ரோ விஞ்ஞானி நாகர்கோவிலைச் சேர்ந்த முத்துநாயகம், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், நடிகர் மாதவன், இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை சவிதா புனியா உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!