மியன்மார் பொதுத் தேர்தலின் இறுதி சுற்று வாக்குப்பதிவு இன்று!
மியன்மார் பொதுத் தேர்தலில் மூன்றாவது மற்றும் இறுதி சுற்று வாக்குப்பதிவு இன்று (25) நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் இராணுவ ஆதரவு பெற்ற கட்சி மகத்தான வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ இல்லை என்றும், நாட்டின் தற்போதைய இராணுவ ஆட்சியை சட்டப்பூர்வமாக்குவதற்காக நடத்தப்படுகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மியன்மாரின் முன்னாள் ஜனாதிபதியான ஆங் சான் சூகி வெளியேற்றப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த தேர்தலை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
முதல் இரண்டு சுற்று வாக்குப்பதிவுகளின் முடிவுகளின்படி, இராணுவ ஆதரவு பெற்ற கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு ஒன்றியக் கட்சி முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.
அங்கு அவர்கள் கீழ் சபையில் 209 இடங்களில் 193 இடங்களையும், மேல் சபையில் 78 இடங்களில் 52 இடங்களையும் வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





