யாழில் காய்ச்சல் காரணமாக ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
யாழில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஆணொருவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கொழும்புத்துறை – ஹெலன்தோட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்ரி ஜெயானந்தன் யூட்கிமோசன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்காக ஆரம்பக்கட்ட சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்ட போதிலும், காய்ச்சல் குறையாத காரணத்தினால் கடந்த 22ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.





