அமெரிக்காவின் 21 மாநிலங்களுக்கு அவசரகால நிலை அறிவிப்பு !
அமெரிக்காவில் கொட்டி தீர்க்கும் பனிப்புயல் காரணமாக 21 மாநிலங்களுக்கு அவசரகால நிலையை அறிவிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவசர காலங்களில் பொது பாதுகாப்புக்குத் தேவையான சில நடவடிக்கைகளை எடுக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த குளிர்கால புயல் தற்போது கிழக்கு நோக்கி நெருங்கி வருவதாகவும், கடந்த 12 மணி நேரத்தில் 6க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உறைபனி மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புயல் காரணமாக அமெரிக்காவில் 15,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 8,700க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.
மேலும் பல மாநிலங்களில் 50,000க்கும் அதிகமான மின் தடைகள் பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





