இலங்கை செய்தி

யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – நியாயமான விலையில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பமான அதே நாளான நேற்று உள்ளூரிலும் கூட்டுறவாளர்களின் கண்காட்சியும் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினால் யாழ். மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களினுடைய உற்பத்திப் பொருள்களின் விற்பனையும் கண்காட்சியும் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் 23.01.2026 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் கண்காட்சி இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வினை நேற்று வெள்ளிக்கிழமை காலை சம்பிரதாயபூர்வமாக வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஆரம்பித்து வைத்தார்.

அரசியல், சமூக ஆய்வாளரான செல்வின் இரேனியஸ் கூட்டுறவின் முக்கியத்துவமும் அதன் இன்றைய நிலையும் தொடர்பில் சிறப்புரையாற்றினார்.

புடவை நெசவாளர் கூட்டுறவுச் சங்கம், பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம், சிக்கன கடன்வழங்குவோர் கூட்டுறவு சங்கம், கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கம், பேக்கரி பொருள்கள் உற்பத்தி சங்கம், தோற்பொருள் அபிவிருத்தி கூட்டுறவு சங்கம், பழ உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் என பல்வேறு சங்கங்களும் இணைந்து கொண்டு தங்களது தரமான உற்பத்திகளை காட்சிப்படுத்தியுள்ளன.

நாளை ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடையவுள்ள இந்த கண்காட்சியில் கூட்டுறவு சபையின் அங்கத்துவ சங்கங்களின் உற்பத்திப் பொருள்களை பொதுமக்கள் நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள முடியும்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!