தாய்லாந்து – கம்போடியா எல்லையில் இந்து சிலைக்கு பதிலாக புத்தர் சிலை அமைப்பு
தாய்லாந்தின்(Thailand) கம்போடியாவுடனான(Cambodia) சர்ச்சைக்குரிய எல்லையில் ஒரு புத்தர் சிலை கட்டப்பட்டுள்ளதாக பாங்காக்(Bnagkok) இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஒரு இந்து தெய்வத்தின் சிலையை இடித்து அகற்றிய அதே இடத்தில் தற்போது புத்தர் சிலை கட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம், தாய்லாந்து மக்கள் அன் மா(An Ma) என்றும் கம்போடியர்கள் அன் செஸ்(An Ses) என்றும் அழைக்கப்படும் எல்லைப் பகுதியில் இந்து தெய்வமான விஷ்ணுவின் உருவம் அழிக்கப்பட்டது.
கம்போடிய அதிகாரிகள் இந்த நடவடிக்கையைக் கண்டித்தனர், அதே நேரத்தில் தாய்லாந்து அந்தப் பகுதியின் மீது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவது அவசியம் என்றும் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும் தெரிவித்திருந்தது.
கம்போடியா மற்றும் தாய்லாந்து இரண்டும் புத்த மத பெரும்பான்மை கொண்ட நாடுகள் ஆகும்.





