Are You Dead? தனிமையில் இருக்கும் பயனர்களுக்காக உருவான அதிரடி செயலி
தனியாக வசிக்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘Are You Dead’ என்ற செயலி சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது.
பயனர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை இதில் உள்ள விசேட பொத்தானை அழுத்தி, ஒவ்வொரு 02 நாட்களுக்கும் ஒருமுறை உறுதி செய்யலாம்.
அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில், பயனர்கள் ஏற்கெனவே பதிந்து வைத்துள்ள நெருக்கமான நபர்களுக்கு தானாகவே முக்கியத் தகவல்கள் தெரிவிக்கப்படும்.
வெகுதொலைவில் தனியாக வசிக்கும் இளைஞர்கள், வயதானவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் மற்றும் தனிமை போன்ற பிரச்சனைகளை நிவர்த்தி செய்யவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த செயலி உதவும் என கூறப்படுகிறது.
இதேவேளை ‘Are You Dead’ என்ற செயலியின் பெயர் எதிர்மறையாக உள்ளதாகவும் இதை ஆர் யூ ஓகே (Are You Okay) அல்லது ஹவ் ஆர் யூ (How are you) போன்ற பெயர்களில் மாற்றியமைத்தால் நேர்மறையாக இருக்கும் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.





