இங்கிலாந்தில் புதிய மரபணு தரவுத்தளம் அறிமுகம் – பொது மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி
இங்கிலாந்தில் புதிய மரபணு தரவுத்தளத்தை பொது சுகாதார சேவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த தரவுத்தளம் மூலம், புற்றுநோயுடன் தொடர்புடைய மரபணுக்களைப் பெற்று, நோயாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்
இந்த நோய் ஏற்படும் அபாயம் அதிகமா என்று அறிய முடியும்.
உலகில் அறியப்பட்ட 120 முக்கிய மரபணுக்களை பட்டியலிட்டு, மக்கள் தங்களது மரபணு தகவல்களைப் பெறலாம் என பொது சுகாதார சேவை
தெரிவித்துள்ளது.
மரபுவழி ஆபத்து இருப்பவர்களுக்கு மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு வழக்கமான பரிசோதனைகள் வழங்கப்படும்.
இந்த கருவி உயிரைக் காக்கும் என்பதுடன் புற்றுநோய்களை விரைவில் கண்டறிய உதவும் என சுகாதார செயலாளர் வெஸ் ஸ்ட்ரீடிங் தெரிவித்துள்ளார்.





