சைபர் குற்றங்கள் தொடர்பாக 318 நபர்கள் கைது : காவல்துறை ஊடகப் பேச்சாளர்!
கடந்த ஆண்டில் (2025) சைபர் குற்றங்கள் தொடர்பாக 318 நபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதுபோன்ற 2,000க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யூ. வூட்லர் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் முதியோர் சமூகத்தை குறிவைத்து மேற்படி குற்றவாளிகள் செயற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இணையத்தை அணுகியவர்களும் இந்த குற்றவாளிகளால் குறிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அதன்படி, இந்த விஷயத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அத்தகைய வெளி நபர்களுக்கு தங்கள் கடவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





