விஜய்க்கு பா.ஜ.க. வலை: ஜனநாயகனை வைத்து வியூகம்?
தமிழக வெற்றிக் கழக TVK தலைவர் விஜயை பா.ஜ.க. BJP தலைமையிலான கூட்டணியில் இணைப்பதற்கு வலை வீசப்பட்டுள்ளது என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
“ஜனநாயகன்” திரைப்படத்தை முடக்கும் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ஜனநாயகன்” படத்துக்கு பா.ஜ.க. தலையீடு இருக்கிறது என்றால் விஜய் அதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும்.
எனினும், இது விடயத்தில் அவர் மௌனித்து இருக்கிறார். எனவே, அவரை தடுப்பது எது என்ற கேள்வி எழுகிறது.
பா.ஜ.க.வையோ அல்லது மோடி அரசையோ வெளிப்படையாக எதிர்க்க விஜய் தயாராக இல்லை என்பது தெளிவாகின்றது.”
-எனவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
இந்த அச்சம் ஏன்? என்பதை மக்களிடையே அவர் தெளிவுபடுத்தினால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது .
விஜயை பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இணைக்க முயற்சி நடக்கிறது. விஜய்க்கு வியூகம் வகுத்து வரும் சிலரையும் பா.ஜ.க. அச்சுறுத்துவதாக தகவல் வருகிறது.
நெருக்கடிக்கு ஆளாகி பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தால் விஜயின் அரசியல் கேள்விக்குறியாகும் என திருமாவளவன் மேலும் குறிப்பிட்டார்.





