சகோதரரை துணை பிரதமராக நியமித்த ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி
ஐவரி கோஸ்ட்(Ivory Coast) ஜனாதிபதி அலசேன் ஔட்டாரா(Alassane Ouattara), அமைச்சரவை மறுசீரமைப்பில் தனது சகோதரரான பாதுகாப்பு அமைச்சர் டெனே பிரஹிமா ஔட்டாராவை(Dene Brahima Ouattara) புதிதாக உருவாக்கப்பட்ட துணைப் பிரதமராக நியமித்துள்ளார்.
மேலும், அவர் தனது பாதுகாப்புத் துறையுடன் சேர்த்து துணைப் பிரதமர் பதவியையும் வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் ஔட்டாரா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அவரது கட்சி வெற்றி பெற்று, நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றதையும் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் துணை நிர்வாக இயக்குநரான 84 வயதான ஔட்டாரா, 2011 முதல் நாட்டை வழிநடத்தி வருகிறார்.




