டி20 தொடர் – நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்தவகையில், இன்று முதலாவது டி20 போட்டி ராய்ப்பூர்(Raipur) நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் குவித்தது.
நியூசிலாந்து அணி சார்பில், ரச்சின் ரவீந்திரா(Rachin Ravindra) 44 ஓட்டங்களும் மிச்சேல் சான்ட்னர் 47 ஓட்டங்களும் பெற்றனர்.
இந்நிலையில், 209 ஓட்ட இழக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவர்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பில், இஷான் கிஷான்(Ishan Kishan) 76 ஓட்டங்களும் சூர்ய குமார் யாதவ்(Suryakumar Yadav) 82 ஓட்டங்களும் குவித்தனர்.
இறுதியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.





