பெங்களூரு விமான நிலையத்தில் 70 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது
பெங்களூருவில்(Bengaluru) உள்ள கெம்பேகவுடா(Kempegowda) சர்வதேச விமான நிலையத்தில், ரூ.70.35 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் எடுத்துச் சென்ற பயணி ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும், பாங்காக்கிலிருந்து(Bangkok) வந்த பயணியின் அடையாளங்களை சுங்க அதிகாரிகள் வெளியிடவில்லை.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 2ல் உள்ள அதிகாரிகள், பாங்காக்கிலிருந்து வந்த ஒரு பயணியை தடுத்து நிறுத்தி 70.35 லட்சம் மதிப்புள்ள 2.01 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை(hydroponic cannabis) பறிமுதல் செய்துள்ளோம்” என்று பெங்களூரு சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், பயணி போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருட்கள்(NDPS) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.





