கேரளாவிலும் பாஜக ஆட்சி: குஜராத்தை உதாரணமாகக் காட்டிய பிரதமர் மோடி
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தைப் போலவே கேரளாவிலும் விரைவில் பாஜக ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
1987-இல் அகமதாபாத் மாநகராட்சியில் தொடங்கிய வெற்றிப் பயணம் குஜராத் மாநிலத்தையே மாற்றியதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், தற்போது திருவனந்தபுரத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி மாநிலம் முழுவதும் எதிரொலிக்கும் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, மூன்று ‘அமிர்த பாரத்’ விரைவு ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த அவர், நவீன கதிரியக்க அறுவை சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரமாக இந்த வருகை பார்க்கப்படுகிறது.





