அவுஸ்ரேலிய லிபரல் கட்சியில் தலைமை மாற்றமா?
அவுஸ்ரேலிய லிபரல் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் முதல் பெண் தலைவரான சூசன் லே (Sussan Ley) பதவி விலக வேண்டும் என அக்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நேஷனல்ஸ் கட்சியுடனான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, சூசன் லேவுக்கு இருக்கும் ஆதரவு குறைந்து வருகிறது.
அவருக்குப் பதிலாக ஆண்ட்ரூ ஹாஸ்டி (Andrew Hastie) அல்லது அங்கஸ் டெய்லர் (Angus Taylor) புதிய தலைவராக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் ராணுவ வீரரான ஆண்ட்ரூ ஹாஸ்டிக்கு கட்சிக்குள் ஆதரவு பெருகி வருகிறது.
பிப்ரவரி 3-ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் முன்னரே, வாக்கெடுப்பு நடத்தி அவரைத் தலைவராக்க அவரது ஆதரவாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், “நான் பதவியில் நீடிப்பேன்” என சூசன் லே உறுதிபடத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





